தமிழகத்தில், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பலமான கூட்டணி தொடரும்  மகளிர் சுய உதவிக் குழுத் திட்டத்தை கலைக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்தார்.

காஞ்சி மகா பெரியவரின் ஆராதனை மகோத்சவத்தில் கலந்து கொள்வதற்காக, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் வியாழக்கிழமை இரவு காஞ்சி சங்கரமடம் வந்வர், செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக பலமான கூட்டணி தொடரும். கடந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியின் வாக்கு வங்கி சிதறாமல் இருக்கும் வகையில் பலமான கூட்டணி அமைந்தது.

இந்தக் கூட்டணி, அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக பலமான வாக்கு வங்கியை பெற்றது. தமிழக வரலாற்றில் இவ்விரு திராவிட கட்சிகளுக்கு எதிராக 19 சதவீதம் வாக்கு வங்கி பெற்றது இதுவே முதல் முறை. 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல், 2ஆவது இடத்தை பா.ஜ.க. கூட்டணி பெற்றது.

தற்போதைய நிலையில், ம.தி.மு.க. தவிர மற்ற கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் இது அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக பலமான கூட்டணியாக இருக்கும். தமிழகத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்கும்.

மகளிர் சுய உதவிக் குழுத் திட்டத்தை கலைக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை. சுய உதவிக் குழு மூலம் பெண்கள் முன்னேற்றம் அடைந்திருப்பதை நாங்கள் கண்கூடாக அறிவோம். எனவே, அதில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வரும் என்றார்.

Leave a Reply