மும்பை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஜகியுர் ரஹ் மான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன்வழங்கியது துரதிர்ஷ்ட வசமானது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது: பெஷவாரில் உள்ள பள்ளியில் தீவிரவாதிகள் கடந்த செவ்வாய்க் கிழமை தாக்குதல் நடத்தியதில் 132 குழந்தைகள் உள்பட 148 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று 2 நாட்களான நிலையில், மும்பை தாக்குதல்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜகியுர் ரஹ்மான் லக்வி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்ட வசமானதாகும்.

பாகிஸ்தான் அரசுத்தரப்பில் இந்தவழக்கை நடத்துவதில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாகவே இவ்வாறு நடந்துள்ளது என கருதுகிறேன். அல்லது, வேறு ஏதாவதுகாரணங்கள் இருக்கலாம்.

இந்த தாக்குதல்சம்பவம் தொடர்பாக இந்தியாவில் தொடரப்பட்ட வழக்கில் விரைவாக விசாரணை முடிக்கப்பட்டு, தீவிரவாதி அஜ்மல்கசாப் தூக்கிலிடப்பட்டார். ஆனால், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்களை இந்திய அரசு அளித்துள்ளது. எனினும், விசாரணை மிகவும் தாமதமாக நடைபெறுகிறது.

தீவிரவாதத்துக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். எனவே, லக்வி ஜாமீனுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply