நம் அகில பாரதத்தலைவர் திரு. அமித்ஷா அவர்கள் நாளை மாலை 3.00 மணிக்கு மறைமலை நகர் திடலில் உரையாற்றுகிறார்.

அணி திரண்டு வாரீர்;, அரசியல் மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்திடுவோம். தமிழகத்தில் பாஜக பலமடைந்து வருகிறது. நம் மாபெரும் இயக்கத்தை மேலும் பலப்படுத்தவும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்துச்செல்லவும், ஓர் மாபெரும் வாய்ப்பாக அகில பாரத தலைவரின் தமிழக பயணம் நடைபெற உள்ளது. அரசியலில் முடியாததை முடித்துக்காட்டுவது தான் நம் அகில பாரதத்தலைவரின் அடிப்படை சக்தி. அடித்தட்டு மக்களுக்கு அனைத்தும் கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு அடிப்படை உறுப்பினர்கள் எண்ணிக்கைகளை உயர்த்தி ஒருகோடி உறுப்பினர் சேர்ப்போம். தமிழகத்திலும் மோடி ஆட்சி அமைப்போம் என்ற தாரக மந்திரத்தோடு பாஜக செயலாற்றி வருகிறது.

உறுப்பினர் சேர்க்கையில் எறும்பு போல சுறுசுறுப்பாகவும், இரும்பு போன்ற உறுதியுடனும் பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்றி வருவது மகிழ்ச்சி. அவர்களை பணிக்கு பலம் சேர்ப்பதாக அமையும் அகில பாரதத்தலைவரின் தமிழக வருகை அகிலபாரதத் தலைவராக இருந்தாலும் அடிமட்ட தொண்டர்களை சந்திப்பது முக்கியம் என்ற உயரிய நோக்கோடு கட்சியின் கொடியை உயரப்பிடித்து உழைத்துக்கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு உரையாற்றுவது மட்டுமல்ல உறுப்பினர் சேர்ப்பு பணியில் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அடிப்படை பணியில் நிர்வாகிகளையும் சந்திக்க வேண்டும் என்ற திட்டம் திரு.அமித்ஷா அவர்களின் பலத்திற்கு மேலும் பலம் கூட்டுகிறது. தமிழகம் மிகசிறந்த வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறுவதற்கும், டாஸ்மாக் இல்லாத தமிழகமாக இத்தமிழகம் மாறுவதற்கும் கல்வி வியாபாரமாகி வருவதை தடுப்பதற்கும், மின்வெட்டு இல்லாத ஒளிமிகுந்த தமிழகம் ஒளிர்வதற்கும், அடித்தட்டு மக்களுக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைப்பதற்கும் ஊழல் லஞ்சம் இல்லாத தமிழகத்தைப் படைப்பதற்கும் தமிழகத்தில் ஓர் அரசியல் மாற்றம் தேவை அந்த மாற்றம் மட்டுமே தமிழக மக்களுக்கு ஏற்றம் தருவதாக அமையும் அந்த ஏற்றமும் மாற்றமும் வர அகிலபாரதத்தலைவர் திரு. அமித்ஷா அவர்கள் வருகை வழிவகுக்கும். தமிழகத்திலும் நல் வழி பிறக்கும்.

20ந்தேதி மாலை 3.00மணிக்கு மறைமலைநகரில் நடக்கும் பொதுக்கூட்டம், தமிழகத்தில் மனநிலை மாற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தும்.

21ந்தேதி காலை 9.00மணிக்கு கமலாலயத்தில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டம் நிர்வாகிகளின் நிர்வாகத்திறமையை பன்மடங்கும் உயர்த்திக்காட்டும்.

மாலை 02.00 மணிக்கு குரோம்பேட்டையில் நடைபெறும் மாவட்டத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர் கூட்டம் தமிழகத்தில் தாமரை மலர்வதற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவரின் மனதிலும் உதித்திருக்கிறது. ஏனென்றால் தொண்டர்களை மதிக்கும் தலைவரின் வருகை தமிழகத்தில் ஆவலை ஏற்படுத்தியிருப்பது மட்டுமல்ல ஆட்சியை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் அனைவருமே நம்புகிறார்கள்…… அகில பாரதத்தலைவரை தமிழக பாரதிய ஜனதா கட்சி வரவேற்க காத்திருக்கிறது. வளாச்சியின் நாயகன் அவரை வரவேற்க தமிழக மக்களும் ஆவலுடன் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

நன்றி Dr.தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக மாநில தலைவர்

Leave a Reply