பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, இன்று சென்னை வருகிறார். சென்னையில், மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நாளை காலையில், தமிழக பாஜக., நிர்வாகிகளுடனும், மாலையில் மாவட்ட தலைவர்களுடனும், அவர் ஆலோசனை நடத்துகிறார்.

பாஜக., தேசிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு , அதிகாரப்பூர்வ பயணமாக அமித்ஷா, இன்று, முதன் முறையாக சென்னை வருகிறார். கொச்சியில் இருந்து விமானம் மூலம், இன்று பிற்பகல் 1:00 மணிக்கு, சென்னை விமானநிலையம் வருகிறார். அங்கு அவருக்கு, தமிழக பாஜக., சார்பில், வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவர், கிண்டியில் உள்ள ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். மாலை, 5:00 மணிக்கு, மறை மலை நகரில் நடைபெறும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதில், தமிழக பா.ஜ.க, மேலிட பொறுப்பாளர் முரளீதர் ராவ், தேசியசெயலர் சதீஷ், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பேசுகின்றனர். கூட்டத்தை முடித்துக்கொண்டு, இரவு அதே ஓட்டலில் அமித்ஷா தங்குகிறார். நாளை காலை 9:00 மணிக்கு, பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயம் செல்கிறார்.

அங்கு,, மாநில தலை வர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தகூட்டம் முடிந்ததும், பிற்பகல் 12 மணியளவில், பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். பின்னர், மாலை 3:00 மணிக்கு, குரோம்பேட்டை ஆனந்தா கல்யாண மகாலில் நடக்கும், மாவட்டதலைவர்கள் கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள், மாவட்ட மையகுழு பொறுப்பாளர்கள், உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் என, 500 பேர் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, நேராக, விமான நிலையம் செல்லும் அமித் ஷா, அங்கிருந்து டில்லி திரும்புகிறார்.

Leave a Reply