பாஜக., தேசிய தலைவர் அமித் ஷா, இன்று மதியம சென்னை வந்தார். இவரது வருகை மூலம் தமிழக பாஜக.,வில் பலம் பெறும் திட்டங்களும், சில முக்கிய பிரமுகர்கள் பா.ஜ.,வில் சேரும் திட்டமும் நடைபெறுகிறது

குறிப்பாக தேர்தல் நடப்பதற்கு முன்னதாகவே மாநில வாரியாக சென்று கட்சியை பலப் படுத்துவதும், மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் வியூகங்களை வகுத்து கொடுப்பதிலும் அமித்ஷா அரசியல் கில்லாடி ஆவார்.எடுத்துக்காட்டாக உ.பி.,யில் பெருவாரியா எம்.பி.,க்களை பெற்றுத்தர காரணமாக இருந்தவர். சமீபத்திய மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மகாராஷ்ட்டிரா தேர்தல்களில் பாஜக,.வுக்கு பெரும்செல்வாக்கை தேடி கொடுத்துள்ளார். இதன் அடுத்தக்குறியாக கேரளா , தமிழக பயணத்தை துவக்கியிருக்கிறார் அமித்ஷா .

சென்னை மறைமலை நகரில் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நாளை காலையில், தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடனும், மாலையில் மாவட்ட தலைவர்களுடனும், அவர் ஆலோசனை நடத்துகிறார்.

Leave a Reply