மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக செயல் பட்ட, லஷ்கர் இதொய்பா கமாண்டர் லக்விக்கு, பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கண்டித்து, நேற்று மக்களவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பாகிஸ்தானின் பெஷாவரில் இருதினங்களுக்கு முன்பு ராணுவ பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 132 குழந்தைகள் உள்பட 148

பேரை சுட்டுக்கொன்றனர். அதைத்தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்தது. இதனிடையில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இதொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டரான ரகுமான் லக்விக்கு பாகிஸ் தான் நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் அளித்தது. இதற்கு இந்தியா கடும்கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக, நேற்று மக்களவையில் நடந்த விவாதத்தின்போது, அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பாகிஸ்தானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உறுப்பினர்கள் பேசிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பெஷாவர் ராணுவப் பள்ளியில் குழந்தைகள் படு கொலை செய்யப்பட்டதன் வலியை, பாகிஸ்தானுக்கு கொஞ்சமும் குறைவின்றி இந்தியாவும் உணர்ந்தது. ஒவ்வொரு இந்தியனின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. ஆனால், உடனடியாக மும்பைதாக்குதல் குற்றவாளி லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது, மனிதாபி மானத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக எம்பிக்கள் தங்களது உணர்ச்சிகளை இங்கு வெளிப்படுத்தி உள்ளார்கள் . அதனை, அரசு தனது நடவடிக்கையில் பிரதிபலிக்க செய்யும். என்று மோடி பேசினார். அதைத்தொடர்ந்து லக்விக்கு ஜாமீன் அளிக்கப்பட்டதை கண்டித்து, தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

பள்ளிகளுக்கு உள்துறை சுற்றறிக்கை தீவிரவாத தாக்குதல், குழந்தைகடத்தல் உள்ளிட்ட அசம்பாவிதத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் பள்ளிக்குள் நுழைந்து, ஆசிரியர்கள், மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து விட்டால், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். மற்றவர்கள் வகுப்பறைகளுக்குள் நுழைந்து கதவுகளை பூட்டிக்கொண்டு தரையில் படுத்துவிட வேண்டும். பிற மாணவர்களுக்கு பீதியை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. பாதுகாப்பான இடம் இருப்பது தெரிந்தால், ஆசிரியர்களோ, விபரம் தெரிந்த மாணவர்களோ மற்றவர்களை வழிநடத்தி, அந்த இடத்துக்கு பத்திரமாக அழைத்துச் செல்லவேண்டும். கூச்சல்போட்டு சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடாது. மொத்தமாக ஒரே இடத்தில் கூடக்கூடாது என்பது உள்ளிட்டவை உள்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Tags:

Leave a Reply