மறைமலை நகர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக அமித்ஷா-வை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துப் பேசினர். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் அமித்ஷாவை சந்தித்த பா.ம.க நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் முக்கியபிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

குறிப்பாக, காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுக்கவும், முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் நடவடிக்கையை தடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், அமித்ஷா உடனான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரி வேந்தர், தமிழகத்தில் பாஜக.,வை வலுசேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply