காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட மைதானத்தில், பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்பதை குறிக்கும் வகையில் புனித ஜார்ஜ் கோட்டை போல பொதுக்கூட்ட மேடையை பாஜகவினர் வடிவமைத்திருந்தனர். பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது.

தமிழகத்தில், மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். அமித்ஷா, உத்தர பிரதேசத்தில் பா.ஜ.,வின் பொறுப்பாளரானதும், 80 இடங்களில், 73ல் வெற்றிபெற்றது. அடுத்து ஜம்மு – காஷ்மீரிலும் ஆட்சியை பிடிப்போம்.முல்லைப்பெரியாறு அணையில், 142 அடி தண்ணீர் தேக்கினால், அணை உடைந்துவிடும் என, கேரள அரசு கூறியநிலையில், 142 அடி தண்ணீர் தேக்க, மோடி அரசு உத்தரவிட்டது.

திராவிடகட்சிகள் செய்ய முடியாததை, பா.ஜ., செய்துவருகிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும், திருக்குறள் போதிக்க, மோடி அரசு ஆணை பிறப்பித் துள்ளது.பாரதியார் பிறந்த நாளில், நாடுமுழுவதும் பள்ளிகளில், கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. பா.ஜ., ஆட்சி அமைந்தால், தமிழர் உயர்வர் என்பதை தமிழ்சமுதாயத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.விரைவில், துாய்மையான அரசை, தமிழகத்திற்கு பா.ஜ., வழங்கும் என்றார்

Leave a Reply