பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

சென்னையை அடுத்த மறைமலை நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நடக்க முடியாததை நடத்திக் காட்டி வரலாறு படைத்த அமித் ஷா முதல் முறையாக தமிழகம் வந்துள்ளார். அவர் பாதம் பட்ட இடங்களில் எல்லாம் பாஜக வெற்றிக் கனியைப் பறித்தது. அதுபோல, தமிழகத்திலும் பாஜக சாதனை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு எதிரான போரை இன்று தொடங்கியுள்ளோம். இந்தப் போரின் இறுதியில் 2016-இல் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம். தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது எனக் கேட்டவர்களுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதில் அளித்தோம். 2016-இல் ஆட்சி அமைக்க பாஜக தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும். திமுக, அதிமுக இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றார்

Leave a Reply