மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்தியா மீதான உலகின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது என ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற 40வது சர்வதேச சமூகசேவை அமைப்புகளின் மாநாட்டு தொடக்கவிழாவில் அவர் பேசியதாவது:

இது தான் தேசத்துக்கு உகந்த தருணம். இந்தியா மீதான உலக நாடுகளின் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய ஒவ்வொருவரையும் தகுதியாக்கி கொள்வதற்கான நிலையை நோக்கி இந்தியா நடை போடுகிறது.

மத்தியில் அதிகார மாற்றம் ஏற்பட்டிருப்பது தான் இதற்கு காரணம். தற்போது மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் செயல் பாடுகள் மாற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால் இது போது மானதல்ல. இத்தேசம் மேலும் வெற்றிகரமானதாக மாற, ஒட்டு மொத்த சமூகமும் எழுச்சி பெறவேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் மட்டுமே அரசின் சாதனைகள் முழு பயனுள்ளதாக இருக்கும். சமூகம் மற்றவர்களுக்காகவும் தேசத்துக்காகவும் தங்களது பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

கார்கில்போரின் போது, பாகிஸ்தான் படைகள் நம்மை விட உயரமான பகுதியில் இருந்த போதும் நாம் வெற்றி பெற்றோம். அதற்குக்காரணம் ஒட்டுமொத்த மக்களும் நமது ராணுவத்துக்கு ஆதரவளித்தார்கள். அதுபோன்ற ஒற்றுமையான சூழலே தேசத்தை வெற்றிகரமாக முன்னகர்த்தும் என்று அவர் பேசினார்.

Leave a Reply