அரசியல் அரங்கில் பாஜக.,வுடன் கடுமையான மோதற் போக்கைக் கடைபிடித்துவரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் குடியரசுத் தலைவர் மாளிகை விருந்தில் சந்தித்துக் கொண்டபோது ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

இந்தியா வந்துள்ள வங்கதேச அதிபர் அப்துல் ஹமீதுக்கு இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது மாளிகையில் இரவு விருந்தளித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திரமோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்தியக் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மம்தாவை எதிர்கொண்ட பிரதமர் நரேந்திர மோதி பரஸ்பரம் அவருடன் நலம் விசாரித்து பேசினார். அரசியல் அரங்கில் மம்தா பானர்ஜி, பாஜக.,வை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply