பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் செய்திகளை மட்டும் போடுவதில்லை. அதை எப்படி சின்சியராக பாலோ செய்கிறார் என்பதற்கு இந்த டிவிட்டர் செய்திப்பரிமாற்றம் ஒரு உதாரணம்.

மோடியின் இளம் வயது காலத்து நண்பர் குதுப். இவரும், இவரது மனைவியும் விபத்தில் சிக்கி கொண்டனர். அதில் குதுப்பின் மனைவி இறந்துவிட்டார். குதுப் காயமடைந்தார்.

இது குறித்து சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் ரஷீதா பகத் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி போட்டிருந்தார். அதில், நரேந்திரமோடி சார், உங்களது இளம் பிராயத்து நண்பர் குதுப்பின் மனை்வி விபத்தில் இறந்துவிட்டார். தெரியுமா?. குதுப்பும் காயமடைந்துள்ளார். என்று போட்டிருந்தார் பகத்.

இதற்கு பதிலளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அதில், நன்றி ரஷீதாபகத். உங்களது டிவிட்டை பார்த்தேன். அதன் பின்னர்தான் நான் குதுப்பிடம் பேசினேன். எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொண்டேன் என்று மோடி கூறியுள்ளார்.

Leave a Reply