சிஎன்என்-ஐபிஎன் தொலைக் காட்சிக்கு அத்வானி ஞாயிற்றுக்கிழமை பேட்டி அளித்தார். அப்போது, நம் நாட்டில் கூட்டணி சகாப்தம் முடிந்து விட்டதாக கருதுகிறீர்களா? என்று செய்தியாளர் கேட்டதற்கு அத்வானி கூறியதாவது:

நான் அவ்வாறு கூற மாட்டேன். இந்தியா போன்ற மாறுபட்ட தன்மைகள் கொண்ட நாட்டில் மீண்டும் கூட்டணி அரசு அமையவாய்ப்புள்ளது.

இந்தியா போன்றதொரு நாட்டில் ஒருவர் அனைத்துச் சூழ் நிலைகளையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

நாடுசுதந்திரம் பெற்றபிறகு, ஒரு கட்சி அரசு இருந்தது. எனினும் அந்த நிலை நீடிக்கவில்லை. வாஜ்பாய் அரசு கூட தனியொரு கட்சி தலைமையிலான அரசு அல்ல என்றார் அத்வானி.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருதை அவரது பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி மத்திய அரசு அறிவிக்கும் என்ற ஊகங்கள் தில்லியில் உலாவருகின்றன.

இதுகுறித்து அத்வானியிடம் செய்தியாளர் கேட்டபோது, ""வாஜ்பாய் போன்ற தேசபக்தருக்கு பாரத ரத்னா விருது வழங்க பட்டால் அது மிகவும் பொருத்தமாக இருக்கும்'' என்றார்.

Leave a Reply