மதமாற்ற பிரச்சினைக்கும் பாஜக., அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

லோக் சபாவில் காங்கிரஸ் உறுப்பினர் வேணு கோபால் பேசும் போது, கேரளாவில் விஷ்வ ஹிந்து பரிசத், 30 கிறிஸ்துவர்களை இந்துமதத்திற்கு மறு மத மாற்றம் செய்ததாக கூறினார்.இதற்கு பதிலளித்த வெங்கய்ய நாயுடு, "மதமாற்ற பிரச்சினைக்கும் பாஜக., அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாடுமிகவும் அமைதியாக இருக்கிறது. ஒரு சிலர் ஏதோ அரசியல் காரணங்களுக்காக சில சர்ச்சைகளை கிளப்புகின்றனர். உறுப்பினர் வேணு கோபால் சொல்லும் குற்றச்சாட்டுக்கு கேரளமாநில அரசல்லவா நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏதோ ஒரு மாநிலத்தில் மத மாற்றம் நடந்தால் அதற்கு பாஜக., எப்படி பொறுப்பாக முடியும்" என்றார்.

Leave a Reply