ஜார்கண்ட் மாநில ஆட்சியை பாஜக கைப்பற்றுகிறது. மொத்தமுள்ள 81 இடங்களில் 44 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
.

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றதேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பிஜேபி வெற்றி பெறும் என்றுசெய்திகள் வெளியாகின. அது போலவே தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியபோது பாஜக அதிக இடங்களைபெற்று முன்னிலையில் இருந்தது.

மொத்தமுள்ள 81 இடங்களில் பிஜேபி 42 இடங்களில் முன்னிலை பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கிறது.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 18 இடங்களிலும், ஜார்கண்ட்விகாஸ் மோர்ச்சா 7 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி ஜார்கண்ட் மாநிலத்தில் பிஜேபி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.

பிஜேபியின் ஆட்சிமன்ற குழு நாளை கூடி ஆட்சியமைப்பது குறித்து முடிவெடுக்கும். முதலமைச்சர் யார் என்பதும் அப்போது முடிவுசெய்யப்படும்.

ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளான மாநில முன்னாள் முதலமைச்சர் மதுகோடா 15 ஆயிரம் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

முன்னாள் ஜனதா தள் அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஜனதாபரிவார் என்ற அமைப்பின் கீழ் போட்டியிட்டன. ஆனால் அந்த அமைப்பு படு தோல்வியை சந்தித்துள்ளது. ஜனதா பரிவாரின் முதல் சோதனையே தோல்வியில் முடிந்துள்ளது. எனவே டெல்லி, பீகார் தேர்தலிலும் இந்த அமைப்பு தோல்வியை சந்திக்கும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சையத் ஷா நவாஸ் உசேன் தெரிவித்துள்ளார்.

பிஜேபிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியை பிஜேபி தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பிறந்த நாளான 25-ந் தேதி சிறப்பாக கொண்டாடப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply