ஜம்மு காஷ்மீர் சட்ட சபையில் வாக்கு சதவீத அடிப்படையில் 23% வாக்குகளை பெற்று பாஜக முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 18% பெற்று 4வது இடத்தில் உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) 28 இடங்களையும் பாரதிய ஜனதா கட்சி 25 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஆளும் தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிர 12 இடங்களில் வென்றுள்ளன.இருப்பினும் வாக்கு சதவீத அடிப்படையில் பாஜக.,வே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

தற்போதைய நிலையில் பாஜக – 23% (11, 07, 179 வாக்குகள்) மக்கள் ஜனநாயக கட்சி – 22.7 % (10,92,203 வாக்குகள்) தேசிய மாநாட்டு கட்சி – 20.8% (10,00,693 வாக்குகள்) காங்கிரஸ் கட்சி – 18% (8,67, 881 வாக்குகள்)

Leave a Reply