கட்சி தொண்டர்களின் கடின உழைப்பால், ஜம்முகாஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது' என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாஜக சிறப்பானவெற்றி பெற்றுள்ளது. பாஜக தொண்டர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பணியின் பயனாக இந்தவெற்றி கிடைத்துள்ளது. கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு, இதுவரை அந்த மாநிலத்தில் இருந்த நிலையைமாற்றி உள்ளது. அந்த மாநில மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளதை தேர்தல்முடிவுகள் காட்டுகின்றன. ஜார்க்கண்ட் மாநில மக்கள், தங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சிதேவை என்பதை உணர்ந்து வாக்களித்துள்ளனர். பாஜக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply