அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின் போது இந்தியாவில் பல இடங்களிலும் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் மற்றும் உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகள் திட்ட மிட்டுள்ளதாக இந்தியா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளுமே எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்திய குடியரசு தினம் ஜனவரி 26ம்தேதி கொண்டாடப்படுகிறது. 2015ம் ஆண்டு குடியரசு தினத் தன்று அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.

இந்திய , அமெரிக்க நல்லுறவை கெடுக்க பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இதொய்பா, அந்த நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் முயற்சிசெய்ய திட்டமிட்டுள்ளது என்று இந்திய உளவுத் துறை சில நாட்கள் முன்பு எச்சரிக்கை பிறப்பித்தது.

இந்நிலையில் அமெரிக்காவும் தற்போது ஒரு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்தவாரம், ஒற்றை மனிதன் நடத்திய தாக்குதலை போல இந்தியாவிலும் தனித் தனி நபர்கள் ஆங்காங்கு தாக்குதலில் ஈடுபடலாம், குறிப்பாக அமெரிக்க பிரஜைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதர கங்களும் குறிவைக்கப் படலாம் என்பதால், அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப் படுத்துமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கைவிடுத்துள்ளது.

Leave a Reply