ஜார்கண்டில் பாஜக., ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில் காஷ்மீரிலும் பாஜக, ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் கைக்கூடி வருகிறது. காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்காக பலகட்சிகள் பா.ஜ.,வுடன் கைகோர்க்க முன்வந்துள்ளன.

நடந்து முடிந்த காஷ்மீர் சட்ட மன்ற தேர்தலில் பாஜக., 25 இடங்களை கைப்பற்றி உள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதனால் தொங்கு சட்டசபை தான் அமையும் என கூறப்பட்டது. இந்நிலையில், பாஜக.,வுடன் கூட்டணி அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி முன்வந்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற பா.ஜ.,, தற்போதைய தேர்தலில் 25 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதனால் காங்கிரசின் அழைப்பை மறுத்துவிட்ட மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக., தலைமையில் காஷ்மீரில் ஆட்சி அழைக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

இதனால் காஷ்மீரில் முதல் முறையாக பா.ஜ.க, ஆட்சி அமைக்க உள்ளது. பா.ஜ.க,விற்கு நிபந்தனையற்ற ஆதரவுவழங்க மக்கள் ஜனநாயக கட்சியும், மக்கள் மாநாட்டு கட்சியும் முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply