ரயில்வே துறை ஒரு போதும் தனியார் மயமாகாது. இதுதொடர்பாக வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை நல்லாட்சி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல் நல்லாட்சி தினமான நேற்று தனது சொந்ததொகுதியான வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அங்குள்ள டீசல் லோகோமோட் டிவ்ஸ் வொர்க் (டி.எல்.டபிள்யூ.) ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள புதியரயில் இன்ஜின்களை பிரதமர் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

சிறுவயதில் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றுள்ளேன். எனது வாழ்க்கை ரயில்வே துறையோடு பின்னி பிணைந்துள்ளது. நான் பிரதமராக பதவியேற்றபிறகு ரயி்ல்வே துறையை உலகத்தரத்துக்கு மேம்படுத்த சிந்தித்து செயல் பட்டு வருகிறேன்.

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் ரயில் இன்ஜின்களில் 96 சதவீத பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் படுகிறது. 4 சதவீத பாகங்கள் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 96 சதவீ தத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்யும்போது அந்த 4 சதவீதத்தையும் ஏன் உள்நாட்டில் தயாரிக்க முடியாது?

அதற்கான முயற்சிகளில் ரயில்வேதுறை வல்லுநர்கள் அக்கறை செலுத்தவேண்டும். ரயில்வே துறையை மேம்படுத்த நாடுமுழுவதும் 4 இடங்களில் ரயில்வே பல்கலைக் கழகங்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

ரயில்வேதுறை என்பது வெறும் போக்கு வரத்து மட்டும் அல்ல. அது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முது கெலும்பு. ரயில்வேயை நாம் முறையாக பயன் படுத்தினால் நமது கிராமங்களை வளர்ச்சி பாதையில் அழைத்துச்செல்ல முடியும்.

அண்மை காலமாக ரயில்வேதுறை தனியார் மயமாகிறது என்று தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம். ரயில்வேதுறை ஒருபோதும் தனியார்மயமாக்க படாது என்று உறுதியாகக் கூறுகிறேன்.

ரயில்வேயை போன்று பாதுகாப்பு துறையில் நமது தேவைகளை நாமே பூர்த்திசெய்யும் அளவுக்கு தன்னிறைவை எட்டவேண்டும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

Leave a Reply