நிலக்கரி சுரங்கங்களை ஆன்லைன் மூலம் ஏலம்விடுவதற்கான வலை தளத்தை மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் துவக்கிவைத்தார்.

நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச் சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இன்று அதற்கான வலை தளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஏலம் எடுப்பவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், நிலக்கரி சுரங்கங்களின் வீடியோ காட்சிகளை பார்வை யிடவும், சுரங்கங்கள் குறித்த பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ளவும் முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 41 சுரங்கங்களை ஆன்லைன் முறையில் ஏலம்விட அரசு திட்டமிட்டிருப்பதாகவும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

Tags:

Leave a Reply