இந்தியா முழுவதும் ஆண்–பெண்களுக்கு இடையேயான விகிதாசாரம் மிகவும் குறைந்துவருகிறது. 2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1000 ஆண்களுக்கு 900 பெண்கள்கூட இல்லை என்ற நிலை உள்ளது. இந்தபாலின விகிதாசாரம் கடந்த 3 ஆண்டுகளில் மேலும் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பலபகுதிகளிலும் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதால்தான் இந்த பாலின விகிதாசாரம் அதிகரித்துள்ளது. எனவே பெண் குழந்தைகள் பிறப்பை உறுதிபடுத்த புதியதிட்டம் ஒன்றை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு ''பெண் குழந்தையை காப்போம். பெண் குழந்தையை படிக்க வைப்போம்'' என்று பெயரிடப்பட்டுள்ளது. பெண்குழந்தைகளுக்கு உதவிகள் செய்யும் பல்வேறு அம்சங்கள் இந்ததிட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி, இந்த புதியதிட்டத்தை அடுத்தமாதம் (ஜனவரி) 22–ந் தேதி தொடங்கி வைக்கிறார். இதற்கானவிழா அரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

இது குறித்து ஹரியாணாவின் பிவானி நகரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் மனோகர்லால் கட்டார் பேசியதாவது:

ஹரியாணா மாநிலத்திலும், நாட்டின் பிற மாநிலங்களிலும் பாலினவிகிதாசாரம் குறைந்து வருவது அவசியம் கவனிக்கப்பட வேண்டியதாகும். சமநிலையற்ற பிறப்பு விகிதா சாரத்தை சரிசெய்ய இந்த புதிய திட்டம் வழிகாணும்.

இத்திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி பானிபட் மாவட்டத்தில் ஜனவரி 22ஆம் தேதி தொடக்கி வைக்கிறார். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஹரியாணாவில் 1000 ஆண்களுக்கு 879 பெண்களே உள்ளனர் சமூகத்துக்காக அதிகாரிகள் நேர்மையுடன் பணியாற்றவேண்டும். ஊழலை எந்த வகையில் சகித்துக் கொள்ள முடியாது என்று அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Leave a Reply