இன்சூரன்ஸ் மற்றும் நிலக்கரிசுரங்க ஒதுக்கீடு செய்வதற்கான மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடிமுதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரிக்க வகைசெய்யும் மசோதா, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உரிமங்களை இணைய தள மூலம் ஏலம் விடுவதற்கு வகைசெய்யும் மசோதா ஆகியவை மாநிலங்களவையில் விவாதத்திற்கு வந்தபோது, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் இந்த இரு மசோதாக்களையும் நிறைவேற்ற முடிய வில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டம் கடந்த 23ம் தேதி முடிவுற்றது. இதையடுத்து, அடுத்த நாள் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், இன்சூரன்ஸ் மசோதா மற்றும் நிலக்கரிசுரங்க ஒதுக்கீடு மசோதா ஆகியவற்றை அவசர சட்டத்தின் மூலம் நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை, ஜனாதிபதி ஒப்புதலுக்காக மத்திய அரசு அனுப்பிவைத்தது. இந்த இரு அவசர சட்டத்திற்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தகவலை ஜனாதிபதியின் பத்திரிகை தொடர்புசெயலாளர் வேணு ராஜ் மோனி நேற்று தெரிவித்தார்.

Tags:

Leave a Reply