அனைத்து அமைச் சகங்களும், துறைகளும் அரசு கொள்முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்னணு பொருட்களையே வாங்கவேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் ஆட்சியமைந்த பின்னர் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதற்காக 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டது' (மேக் இன் இந்தியா) என்ற புதியதிட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்த திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் அலுவலகம் ஒருபுதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் அரசு கொள்முதலாக மின்னணுபொருட் களை வாங்கும் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதையே வாங்கவேண்டும். அப்படி வாங்கப்பட்ட பொருட்கள் விவரத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கையாக வெளியிட வேண்டும். அரசு செயலாளர்கள் அடங்கியகுழு இந்த முடிவை எடுத்துள்ளது.

உள்நாட்டில் மின்னணு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப துறை ஏற்கனவே வெளியிட்டுள்ள மாதிரி ஒப்பந்தத்தை அனைத்து துறைகளும் மின்னணு பொருட்கள் கொள்முதலின் போது கடைபிடிக்க வேண்டும். அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநில அரசுகள் மின்னணு பொருட்கள் கொள்முதல் குறித்து வெளியிடும் அறிக்கைகளை கண்காணிப்பதற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை ஒரு ஆன்-லைன் கண்காணிப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

இதன்மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை கண்காணித்து எந்தெந்த துறைகள் எவ்வளவு உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்கியிருக்கிறார்கள் என்பதை அதன்மதிப்பில் தெரிவிக்க வேண்டும்.
என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply