ஜார்க்கண்ட்டில் நடந்துமுடிந்த தேர்தலில் பாஜக. மற்றும் ஏ.ஜே.எஸ்.யூ. கட்சிகளின் கூட்டணி 42 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து, அங்கு பாஜக. தலைமையிலான ஆட்சி அமைக்கப் பட்டுள்ளது.

முதலமைச்சராக ரகுவர் தாஸ் இன்று (28ம் தேதி) காலை 11.30 மணியளவில் பதவியேற்று கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.

இந்தவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக. தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், ஜார்க்கண்ட்டில் இன்று கடும் பனிப் பொழிவு ஏற்பட்டதால், மோடியும், அமித்ஷாவும் கலந்து கொள்ளவில்லை.

Leave a Reply