கோவை வந்திருந்த பா.ஜ.க, தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட சபை தேர்தலையொட்டி 2015ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் 16 லட்சம் உறுப்பினர்களை பாஜக.,வில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர்கள் பலரும் விரைவில் பாஜக.,வில் இணைவார்கள் என தெரிவித்துள்ளார். யார்யார் எந்தகட்சியில் இருந்து பா.ஜ.,விற்கு வர போகிறார்கள் என கேட்டதற்கு, அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Leave a Reply