மத்திய அரசுக்கு எதிராக பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அனுப்பி வைக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிரான விமர் சனங்களும், ஆட்சியின் குறைபாடுகளும் அவ்வப்போது, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப் படுகின்றன. இவற்றை அனுப்பி வைக்கும்படி மோடி உத்தரவிட்டதையடுத்து, மக்கள் தகவல்தொடர்பு துறை இது தொடர்பான தகவல்களை சேகரித்து தினந்தோறும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிவைப்பதாக கூறப்படுகிறது. மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இது அமையும் வகையிலும், எதிர் பார்ப்புகளை நிறைவேற்றும வகையிலும் இந்த நடவடிக்கையை மோடி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Tags:

Leave a Reply