நிலம் கையகப்படுத்துததல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப் படுவது விவசாயிகளுக்கு நன்மை தரும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன்களை காக்கும்வகையில், இந்த சட்டத்தில் சிலதிருத்தங்கள் செய்யப்பட உள்ளன. விவசாயிகளின் நல் வாழ்வையும், நாட்டின் பாதுகாப்பு சார்ந்த பணிகள், வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு இந்த திருத்தங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறைக்கான தளவாட உற்பத்தி, மின்சாரவசதி உள்பட ஊரக உள்கட்டமைப்பு வசதிகள், ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம், தொழிற்பேட்டைகள், தனியார்துறை – பொதுத் துறை கூட்டுறவில் உருவாக்கப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவாக மேற்கொள்ள இச்சட்டத்தில் செய்யப்பட உள்ள திருத்தங்கள் உதவும்.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை அமல்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதை மாநிலங்கள், அமைச்சகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எடுத்துக்கூறினர். அதையடுத்து, சட்டத்தில் திருத்தங்கள் செய்ய முடிவுசெய்ய பட்டது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply