செராபுதின் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விடுவிக்கப்படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சொராபுதீன் ஷேக்குக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பு

இருப்பதாகக்கூறி அவரையும், அவரது மனைவி கௌசர் பீயையும் கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குஜராத் மாநிலம், காந்தி நகரில் போலீஸhர் சுட்டுக்கொன்றனர்.

இந்த எண்கவுன்ட்டர் சம்பவத்தில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்து அமித் ஷாவிற்கு தொடர்ப்பு இருப்பதாக அன்றைய காங்கிரஸ் அரசு பொய் குற்றச்சாட்டை புனைந்தது. இது தொடர்பான அவர் மீதான வழக்கு கடந்த 2012ம் ஆண்டு குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. மும்பை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரான அமித் ஷா உள்பட 38 பேருக்கு இந்த என்கவுன்ட்டரில் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது அமித்ஷாவிற்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply