விவசாயம், ஊரகமேம்பாட்டு அமைச்ச அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடந்தது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றம்செய்ய அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இந்தகூட்டம் நடந்துள்ளது. இதில் ஊரக பாசன திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாசன திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். இதற்காக இவற்றை மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த வேண்டும்.

இதையடுத்து திட்டசெயல்பாடுகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். இது போல் நாடுமுழுவதும், பல நதிகள் இணைக்கப்பட உள்ள நிலையில், எந்ததிட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்; எந்த திட்டத்தை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து கண்டறியுமாறும், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு மோடி உத்தரவிட்டார். இதனால், நதிகள் இணைப்பு திட்டம், விரைவில் வேக மடையும்

மேலும் நாடுமுழுவதும் உள்ள நீர்நிலைகளை, செயற்கைக் கோள் உதவியுடன் வரைபடம் தயாரித்து, அதன் மூலம் விவசாயிகளுக்கு, கைவசம் உள்ள நீர்பாசனவசதி என்ன என்பதை விளக்க வேண்டும்.

முக்கிய நகரங்களில் உள்ள தண்ணீர் சுத்தி கரிப்பு, மறு சுழற்சி திட்டங்களில் இருந்து, அருகில் உள்ள கிராமங்களுக்கு நீர்பாசன வசதி ஏற்படுத்துவது குறித்த விரிவான திட்டங்களை ஆராயவேண்டும்.

குடிநீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை, மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு, பிரதமர் மோடி உத்தரவிட்டதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply