டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய துறைமுகம் அமைக்கப்படும். சேது சமுத்திர திட்டம் மாற்று வழியில் செயல்படுத்தப்படும். இது தொடர்பாக 4-5 வழிகளில் ஆய்வு செய்யப்பட்டது. நானும் நேரில் சென்று ஆய்வு செய்தேன். இந்த திட்டம் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன், சுப்ரீம் கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்படும் என கூறினார்.

Leave a Reply