முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங் கடந்த 4 மாதங்களுக்கு முன் வீட்டில் தவறி கீழேவிழுந்ததில் தலையில் பலத்த காயங்களுடன் தில்லியில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் சிகிச்சைக்ககா அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ச் செய்யப்பட்டார். 76 வயதாகும் ஜஸ்வந்த்சிங் கடந்த ஆக.8ம் தேதி, தனது வீட்டில் நினைவிழந்த நிலையில் கீழே விழுந்துகிடந்த போது குடும்பத்தினர் கண்டு, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது லேசாக நினைவுதிரும்பிய நிலையில் அவரை வீட்டுக்கு செல்ல மருத்துவர்கள் அனுமதித்துள்ளனர். வீட்டில்வைத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply