பாராளுமன்றத்தில் பா.ஜ.க.,வுக்கு தனிமெஜாரிட்டி இருந்தாலும், மேல்சபையில் பா.ஜ.க.,வுக்கு மெஜாரிட்டி பலம் இல்லை. முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற இரு சபைகளின் ஒப்புதல் அவசியம்.

இதனால் மத்திய அரசு காப்பீட்டுத் துறையில் நேரடி அன்னிய முதலீடு, வீடுகட்டும் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துதல், நிலக்கரி ஒதுக்கீடு ஏலம் என முக்கிய விவகாரங்களில் அவசர சட்டம் கொண்டு வந்தது.

இந்த அவசரசட்டங்களுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல்தேவை. ஆனால், மேல்சபையில் அவசர சட்டங்கள் நிறைவேறுவது கடினம் என்பதால் பாராளுமன்றத்தின் இருசபைகளின் கூட்டு கூட்டத்தை கூட்டி அதில் ஒரே நேரத்தில் அவசர சட்டங்கள் மீது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகி வருகிறது..

இதுபற்றி பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் கூட்டு கூட்டம் கூட்டப்படலாம் என்று தெரிகிறது. அதன் பிறகு வழக்கமான பட்ஜெட் கூட்டத்தை பிப்ரவரி மாதம் கூட்டலாம் என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Leave a Reply