2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் காங்கிரஸ் கட்சியை ஒழித்துக்கட்டும் ஐ.மு.கூட்டணி ஆட்சி, இந்தியாவின் பொருளாதாரவீழ்ச்சி என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார் .

வெளிநாடுவாழ் இந்தியர்களிடையே காணொளி காட்சியின் மூலம் முதல்வர்

மோடி பேசியதாவது: தற்போதைய ஆட்சியினர் தங்களுடைய தவறுகளை மறைக்க மக்களை திசைதிருப்ப பார்க்கின்றனர். அதனால் மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

மக்கள தங்கள் ஜனநாயக உரிமையைமீட்க 2014ல் போராடுவர். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தேர்தலில் ஓட்டுப்போட வேண்டும். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்தியா சிறப்புடன் இருந்தது. சிறந்த நிர்வாகத்திற்கு ஒருமுன் உதாரணமாக அந்த ஆட்சி விளங்கியது.

இந்தியா ஒளிர்கிறது என்ற கனவு, வாஜ்பாய் ஆட்சியோடு தகர்ந்துவிட்டது. தற்போதைய அரசு வளர்ச்சியை குறைத்துவிட்டது. இந்தியவின் தற்போதைய பிரச்னைகளுக்கு பா.ஜ.க, மட்டுமே தீர்வாகாது முடியும். பா.ஜ., முதல்வர்களும் சிறப்பாகசெயல்பட்டு வருகின்றனர்.
வரப்போகும் 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங். கட்சியை ஒழித்துக்கட்டும் தேர்தல் மட்டுமல்ல, மக்களாட்சியை கொண்டுவரும் தேர்தலாக அமையும் என்றார்.

Leave a Reply