இதோ ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து நாட்டின் முதல் குடிமகனாக ராம் நாத் கோவிந்த் வந்து விட்டார்.இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக நாடு இவ ரை அடையாளப்படுத்தினாலும் நம்மை பொருத்த
வரை இந்தியாவின் உண்மையான அடையாளத் துடன் தேர்வாகியுள்ள முதல் ஜனாதிபதி இவர் என்றே சொல்லலாம்.

பல்வேறு மதங்கள் மொழிகள் கலாச்சாரங்களை கொண்ட இந்தியா மாதிரி ஒரு தேசத்தை ஒருங்கிணைப்பது மிக கஷ்டமான காரியம்.அதை ஆர்எஸ் எஸ் இயக்கம் சரியாக திட்டமிட்டு செய்து வருகிறது் என்பதை உறுதியாக சொல்லலாம்.

ஆர்எஸ்எஸ் தொடங்கி 92 ஆண்டுகள் கடந்த நிலை யில் அதன் உறுப்பினர்கள் இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்பான ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கு தேர்வாகி வந்திருப்பது ஆர்எஸ்எஸ் ஸின் கோட்பாடான "சுயநலமின்றி தாய் நாட்டிற்கு சேவை செய்தல்" என்கிற லட்சியத்திற்கு காலம் கொடுத்த பரிசு என்றே சொல்லலாம்.

ஹெட்கேவர் காலத்தில் இந்துக்களை ஒருங்கிணை க்கும் ஒரு சக்திவேண்டும் என்பதற்காகவே ஆர்எஸ் எஸ் தொடங்கப்பட்டது. அதனால் சாதி பேதமற்ற சமத்துவமும் சகோதரத்துவமும் தான் இங்கே மிக முக்கியமான கோட்பாடுகளாகும்.

உயர்சாதி தாழ்ந்த சாதி வேறுபாடுகள் ஆர்எஸ்எஸ் ஸுக்குள் நுழையக்கூடாது என்பது தான் ஹெட்கே வர் புகுத்திய விதி.இந்த விதி் அந்த இயக்கத்தில் இன்று வரை இருந்தாலும் ஏனோ இந்திய மக்களா ல் அது உணரப்படாமல் இருந்தே வந்த்து.

காந்திப்படுகொலை என்கிற ஒற்றை வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு ஆர்எஸ்ஸை எதிர்த்து அரசியல் செய்து வந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிசத்தின் நிஜ அடையாளத்தை மக்கள் காலப்போக்கில் கண்டு கொண்டார்கள்.

மதரீதியாக நாட்டை பிளவுபடுத்தி இந்தியாவை துண்டாடி இந்திய அரசியலை நேரு குடும்பத்தின் காலடியில் வைத்திருந்த காங்கிரஸ் கட்சியின் ஊழல் முகமும் இந்தியாவின் கலாச்சாரத்தை அழித்து அதன் மூலம் இந்தியாவில் வளர இருந்த இடதுசாரிகளி ன் தீவிரவாத முகமும் இந்திய மக்களுக்கு தெரிய வந்ததால் தான் இந்திய கலாச்சாரத்தை ஒருமைப்படுத்தி இந்தியாவை வலிமைப்படுத்தும் இந்துத்வா அரசியலை வழி நடத்தும் பிஜேபியை மக்கள் பெரும் பான்மை பலம் கொடுத்து ஆட்சியில் அமர வைத்தார் கள்.

இதனால் தான் பிஜேபி என்கிற அரசியல் கட்சியின் மூலம் ஆர்எஸ்எஸ்ஸின் உண்மையா ன முகத்தை மக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக இன்று தலித்சமூகத்தை சேர்ந்த ஒரு விவசாய குடும்பத்தில் பிற ந்த ஒரு சாமானிய ஆர்எஸ்எஸ்க்காரர் பாரதநாட்டின் முதல் குடிமகனாக பாரத நாட்டின் கலாச்சார த்தை பிரதிபலிக்கும முதல் ஜனாதிபதியாக வந்துள்ளார்.

இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ்ஒரு இயக்கத்தில் இருந்து ஒருவர் நாட்டின் முதல் குடிமக னாக வருவதென்பது சாமானிய விசயம் அல்ல. இதை அடைய அவர்கள் எத்தனை கடும் பாதைகளை கடந்து வந்துள்ளார் கள் என்பதை உணர்ந்து கொண் டால் இந்த தேசத்திற்காக அவர்கள் சிந்திய இரத்தத தின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

எனக்கு உள்ள மிகப்பெரிய சந்தோசம் என்னவென் றால் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்
அனைத்திலும் இடது சாரி இயக்க ங்களின் தொழிற் சங்கங்களே கோலோச்சி வரும் நிலையில் அவர்கள்
சித்தாந்த்த்திற்கு நேரெதிரான ஆர்எஸ்எஸ் இயக்க த்தில் இருந்து வந்த ராம்நாத்கோவிந்தின் படத்தை
அவர்கள் அலுவலகங்களில் வைத்து போற்றும் சூழல் இப்பொழுது வந்துள்ளது.

இதை நினைக்கும் பொழுது எப்படிஇந்தியாவில் பொதுவுடைமை கொள்கையை புறந்தள்ளி முத லாளித்துவ கொள்கையை இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டதோ அதே மாதிரி அங்குள்ள மக்களிடம் இடதுசாரி சிந்தனை கள் மறைந்துஇந்துத்வா சிந்தனைகள் வேர் பிடிக்கும் காலம் நெரு ங்கி கொண்டிருப்பதையே அங்கு வைக் கப்படும். இந்தியாவின் 14 வது ஜனாதிபதியும் எங் களின் முதல் ஜனாதிபதியுமான ராம் நாத் கோவிந்தி ன படம் எனக்கு உணர்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.