டில்லி சட்ட சபை தேர்தலுக்கான பாஜக.,வின் பிரசார பயணத்தை பிரதமர் மோடி, ஜனவரி 10ம் தேதியன்று துவக்கிவைக்க உள்ளார்.

ராம்லீலா மைதானத்தில், பாஜக., தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் இந்தபிரசாரம் துவக்கப்பட உள்ளதாகவும், ஆம் ஆத்மி கட்சியை குறிவைத்தே இந்தபிரசாரம் இருக்கும் எனவும் பாஜக.,வின் டில்லி செய்தித தொடர்பாளர் ஹரிஷ் குரானா தெரிவித்துள்ளார்.

மேலும் மோடிதான் எங்கள் அணியின் கேப்டன், அவரை முன்னிறுத்தியே எங்களின் பிரசாரபயணம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply