திருக்குறளை தேசியநூலாக அறிவிக்க அனைத்து எம்பி.க்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூக்கடல்கள் சங்கமிக்கும் குமரிக்கடலில் திருவள்ளூவர் சிலை நிறுவப்பட்டதன் 15ம் ஆண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் . தருண் விஜய் தலைமையில் திருக்குறள் நடைப்பயணம் குமரியில் வரும் 11&ம் தேதி தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூவர் சிலைக்கு பாலம் அமைக்க தமிழக அரசு கேட்டுக்கொண்டால் மத்திய அரசு உதவிசெய்யும் . முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய அரசு கேரளாவுக்கு சாதகமாக இருப்பதாக வைகோ கூறியிருப்பது குறித்தகேள்விக்கு போராட்டத்துக்கு வைகோ காரணம் தேடுவதாக அவர் பதில் அளித்தார்.

Tags:

Leave a Reply