நாட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள தேசிய நெடுஞ் சாலைகள் இனி கான்கிரீட் சாலைகளாக அமைக்கப் படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய சாலை போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறும்போது, ''சுங்கச் சாவடிகள் குறித்து இந்திய போக்கு வரத்துக் கழகம், இந்திய மேலாண்மை நிறுவனம் (கொல்கத்தா) இணைந்து ஆய்வு நடத்தின. அந்த ஆய்வில், சுங்க சாவடிகளில் நீண்டநேரம் வாகனங்கள் காத்திருக்கும் போது வீணாகும் எரிபொருளின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடியை தாண்டும் என்று தெரியவந்துள்ளது.

காத்திருக்கும் போது விரயமாகும் நேரத்தையும் சேர்த்து கணக்கிட்டால் ரூ.88,000 கோடி ஆண்டு தோறும் வீணாகிறது. தற்போது மும்பை-டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள 350 சுங்க சாவடிகளில் 140 சாவடிகளில் மின்னணுமுறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால் காலவிரயம், எரிபொருள் வீணாவது குறைக்கப்படுகிறது. இந்தமுறை நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டால் ஆண்டுக்கு ரூ.88.000 கோடி சேமிக்க முடியும். சுங்கச்சாவடிகளே இல்லாத சாலைகளை அமைப்பதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறோம்.

சுங்கச் சாவடிகளில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து கடந்த இரண்டு மாதமாக விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பிரதமர், மத்திய அமைச் சரவையின் ஒப்புதலுடன் புதிய சுங்கச்சாவடிக் கொள்கையை ஒரு மாதத்துக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறோம். மத்திய அரசால் புதிதாக அமைக்கப்பட உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் கான்கிரீட் சாலைகளாக அமைக்கப்படும்" என்றார்.

Leave a Reply