குஜராத் கடல் எல்லையில் வெடி பொருட்களுடன் இந்திய பகுதியில் நுழைந்த பாக். மீன்பிடிப்படகின் சதிவேலையை இந்திய கடலோர காவற்படை முறியடித்தது.

இதுகுறித்து பாஜக தேசியசெயலர் ஸ்ரீகாந்த் சர்மா கூறும் போது, "வெறுப்படைந்த பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலை இந்தியாவுக்கு எதிராகசெய்த இன்னொரு விரய முயற்சியாகும். தொடர்ந்து பயங்கர வாதத்திற்கு ஆதரவு அளித்தும், பயங்கரவாதத்தை ஏற்றுமதிசெய்தும் வருகிறது பாகிஸ்தான்.

பயங்கரவாத நடவடிக்கையை திறமையாக முறியடித்த கடலோரக் காவல் படையை பாஜக மனம்திறந்து பாராட்டுகிறது. படைகள் பயங்கரவாதத்தை முறியடிக்க சுயமாக, சுதந்திரமாக செயல் பிரதமர் மோடி அளித்த அதிகாரமாகும். இது மோடின் தலைமைப் பண்பை எடுத்துரைக்கிறது.

வெங்கைய நாயுடு தெரிவிக்கும் போது, "பயங்கரவாதத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானுக்கு இது தற்போது ஒரு தீராப் பழக்கமாகவே ஆகிவிட்டது" என்றார்.

பாஜக செய்தித்தொடர்பாளர் நரசிம்ம ராவ் கூறும்போது, "பயங்கரவாத சதி வேலைக்கான முயற்சியாகவே இது தெரிகிறது. கடலோர காவற்படையின் செயலை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்." என்றார்.

Leave a Reply