டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் முழு மெஜாரிட்டி யுடன் பாஜக ஆட்சியமைக்கும் என்று பாஜக.,வின் தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

மும்பையில் பேசிய அவர், பாஜக ஆட்சிக்குவந்த பின்னர் கடந்த 7 மாதங்களில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 9 முறை குறைக்கப் பட்டுள்ளது. அமைச்சர்கள் சுதந்திரமாக செயல் படுவதால், பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சியமைப்பது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவற்றுடன் பேச்சு நடந்துவருகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முழுமெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்றார்.

Leave a Reply