கருப்புப் பண பிரச்சினைக்கு ரொக்க மில்லாத பண பரிவர்த்தனைகளே சிறந்ததீர்வாக இருக்க முடியும் ம் என்று பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் கிராமத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி குஜராத்மாநிலத்தில் உள்ள அகோதரா என்ற கிராமத்தைத் தத்தெடுத்துள்ளது. இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மும்பையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் மோடி கலந்து கொண்டு பேசினார்.

மோடி பேசுகையில், '' பணத்தைக் கைகளில் கொண்டுசெல்லாமல் காசோலை, வரைவோலை, டெபிட்காட்டு, கிரெடிட் கார்டு போன்ற ரொக்கமில்லாத முறைகளில் வங்கி பண பரிமாற்றம் செய்தால் கருப்பு பண புழக்கத்தை தடுக்கலாம். இந்த வழிமுறையை வங்கிகள் முன்னெடுத்துச் செல்லவேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.

Tags:

Leave a Reply