விமர்சிப்பது என்பது இல்லை யென்றால், ஜன நாயகத்துக்கு பாதிப்பு உண்டாகும் . தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் போது தான் சுத்தமாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், கோலாப் பூரில் சனிக்கிழமை நடைபெற்ற மராத்தியமொழி பத்திரிகையான "புதாரி'யின் 75வது ஆண்டுதின விழாவில் அவர் பேசியதாவது:

விமர்சிப்பது என்பது இல்லை யென்றால், ஜன நாயகத்துக்கு பாதிப்பு உண்டாகும் . தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் போது தான் சுத்தமாக இருக்கும். அதேதண்ணீர் தேங்கி நின்றால் அசுத்தமாகி விடும். அதேபோல், ஜனநாயகத்தை சுத்தப்படுத்துவதற்கு விமர்சித்தல்தான் சிறந்த வழி முறையாகும்.

உண்மை நிலையை பரிசோதிப்பதற்கும், தவறானவழியில் செல்வதை தடுப்பதற்கும் விமர்சித்தல் உதவியாக இருந்தால், அதுபெரிதும் வரவேற்கப்படும். இந்த பணியைத் தான் ஊடகங்கள் செய்யவேண்டும்.

ஆனால் இதில் வருத்தம் தருவது என்னவென்றால், மோசமானவர்கள் அரசில் இருக்கும் போது விமர்சனம் செய்யக்கூட முடியாது. இதே போல், ஜனநாயகத்தின் துரதிருஷ்டம் என்னவென்றால், விமர்சிக்கும்போக்கு குறைவாகவும், குற்றச்சாட்டுகள் தெரிவிப்பது அதிகமாகவும் உள்ளது. குற்றச் சாட்டுகளை மட்டுமே தெரிவிப்பதால், எதுவும் நடந்துவிடாது.

ஜனநாயக நாட்டில், தகவல்தொடர்பு மிகவும் முக்கியபங்கு வகிக்கிறது. இதில், நம்பகத்தன்மையை தக்க வைப்பது தான் ஊடகங்களுக்கு பெரும் சவாலாகும்.

அவசரநிலை காலத்தில், தனிப்பட்ட அதிகாரத்தின் மீதுள்ள விருப்பத்தினால், ஜனநாயகத்துக்கு எதிராக அடக்கு முறை மேற்கொள்ளப்பட்டதை நாம்கண்டோம். அப்போது, செய்தித் தாள் அலுவலகங்கள் மூடப்பட்டன. அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த பத்திரிகை அதிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அரசு விரும்பியது மட்டும் தான் பிரசுரிக்கப்பட்டது.

இதை மக்கள் தெரிந்து கொண்ட போது, செய்தித்தாள்கள் படிப்பதை நிறுத்திக்கொண்டனர். ஆனால் அந்த கால கட்டத்திலும் சிலபத்திரிகைகள் நம்பகத்தன்மையுடன் செயல்பட்டன. அதில் "புதாரி'யும் ஒன்று.

குற்றச்சாட்டுகளை எளிதில் தெரிவித்து விடலாம். விமர்சிப்பதற்குதான், கடினமாக பணியாற்ற வேண்டும். விமர்சனங்களை ஊடகங்கள் மேலும் கூர்மைப் படுத்த வேண்டும். இது அரசின் சிறந்த நிர்வாகத்துக்கு உதவியாக இருக்கும்.

ஜனநாயக நாட்டில், அரசுதெரிவிப்பதை அப்படியே முழுவதும் நம்ப மக்கள் தயாராக இல்லை. பிறவழிகள் மூலமாக அதன் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ள மக்கள் விரும்புகின்றனர். இது தான், ஜனநாயகத்துக்கு இருக்கும் தனி சிறப்பாகும் என்றார் மோடி.

Tags:

Leave a Reply