ஜம்மு காஷ்மீரில்ல் ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று டெல்லியில், கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் பாஜக தேசியதலைவர் அமித்ஷா. நடந்துமுடிந்த காஷ்மீர் சட்ட சபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக் காததால், அங்கு ஆட்சி அமைக்கும் முயற்சியில் இழுபறி நிலவிவருகிறது.

இந்நிலையில், காஷ்மீரில் ஆட்சிஅமைப்பது தொடர்பாக இன்று கட்சி தலைவர்களுடன் டெல்லியில் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், காஷ்மீர் மாநில பாஜக தலைவர்களைத் தனித் தனியே சந்தித்து அவர்களது விருப்பங்களை கேட்டறிந்தார். அவர்களது கருத்துக்களை இன்றையகூட்டத்தில் அமீத்ஷாவிடம் அவர் எடுத்துவைப்பார். காஷ்மீர் மாநில சட்ட சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 13 நாட்களாகி விட்டன. இதில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பாஜக.,வுக்கு 25 இடங்களும் கிடைத்தன. தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸுக்கு 12 இடங்களும் கிடைத்துள்ளன.

Leave a Reply