திமுகவில் அண்ணன் தம்பி சண்டை உச்சத்தை எட்டிவிட்டது. அங்கு திமுகவினர் குழம்பி போயுள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக பிரமுகருமான நடிகர் நெப்போலியன் கூறியுள்ளார்.

சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் நெப்போலியன். இந்நிலையில் இன்று சென்னையில் அவரது ரசிகர் மன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நெப்போலியன் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் வித்தி யாசமான முயற்சி, தொலை நோக்கு திட்டங்கள், தூய்மை இந்தியா திட்டம் இவை எல்லாம் என்னை கவர்ந்தது. அதனால் தான் நான் திமுகவில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தேன். ஏற்கனவே திமுகவில் இருந்து என்னை ஓரம் கட்டி வைத்திருந்தனர். அங்கு எனக்கு மரியாதையில்லை . அதனால் கடும் மனஉளைச்சலில் இருந்தேன். இப்போது பாஜக.,வில் இணைந்திருப்பது மனதிருப்தி அளிக்கிறது.

எனது ரசிகர்கள், ரசிகர்மன்ற நிர்வாகிகள் அனைவரையும் பாஜகவில் இணைத்து இருக்கிறேன். எனது ரசிகர்கள் மூலம் தமிழகம்முழுவதும் பாஜகவுக்கு ஒருலட்சம் உறுப்பினர்களை சேர்ப்பேன். திமுகவில் இப்போது அண்ணன்-தம்பி சண்டை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது . அங்கு திமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பாஜகவில் உறுப்பினர்கள் மிகுந்த ஒற்றுமையுடன் கட்சிபணியாற்றி வருகின்றனர். நான் எந்த எதிர் பார்ப்பும் இன்றி இணைந்துள்ளேன். பதவி, அதிகாரங்களை மேலிடம் விரும்பிதந்தால் ஏற்றுக் கொள்வேன் என்றார்

Leave a Reply