2015-16ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், மக்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற்று, அதனை பட்ஜெட்டில் சேர்க்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுக்கு வலியுறுத்தி உள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற அமைச் சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அமைச்சகங்களுக்கான இணையதளங்கள் மற்றும் பிற இணையவழிகள் மூலமாக மக்களிடம் இருந்து ஆலோசனைகளை பெறவேண்டும் என்று தெரிவித்தார். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மூலமாக உருவானதுதான் தூய்மை இந்தியாதிட்டம் என்பதையும் பிரதமர் மோடி அமைச்சரவை கூட்டத்தின் போது சுட்டிக் காட்டினார். அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை, ஆண்டுமுழுவதும் ஒரேசீராக பயன்படுத்தும் வழக்கத்தை உறுதிசெய்ய வேண்டும் எனவும், ஆண்டு இறுதியில் ஒட்டுமொத்தமாக நிதியை செலவிடும் வழக்கத்தை கைவிடவேண்டும் என்றும் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

Leave a Reply