பாஜக கூட்டணியில் பாமக. இடம்பெற்று இருந்தாலும் மத்திய பா.ஜ,க அரசை டாக்டர் ராமதாஸ் விமர்சித்துவருகிறார். இது பற்றி ஏற்கனவே தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் ராமதாஸ், 'ஆளுங்கட்சியின் குறைகளை விமர்சிப்பது தான் எதிர்க்கட்சிகளின் கடமை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒருநிலைப்பாடு இருக்கும். வருகிற சட்டமன்ற தேர்தலில் பாமக. தலைமையில் கூட்டணிஅமையும். பா.ஜ.க தலைமையில் கூட்டணி என்பது அவர்கள் கருத்து. கூட்டணியில் நீடிப்பதுபற்றி கட்சி பொதுக்குழுவில் முடிவு செய்வோம் என்றார்.

இதுபற்றி இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:–

கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல. அதற்கு இன்னும் காலஅவகாசம் உள்ளது. எங்கள் கூட்டணியை பொறுத்த வரை எந்த கட்சியும் வெளியே செல்ல கூடாது என்பதுதான் எனது எண்ணம்.

கூட்டணி என்பது நீண்டகால நன்மை கருதி ஒரு வழிப்பாதையாக இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம். யார் வெளியேறினாலும் பா.ஜ.க.,வுக்கு பாதிப்பு இல்லை என்று அவர் கூறினார்.

Leave a Reply