குறைந்தபட்ச பொது செயல்திட்டம், வரையறுக்கப்பட்ட பேச்சு வார்த்தை ஆகியவற்றின் அடிப்படையில் தான் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நயீம் அக்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜகவுடன் ஒருவேளை கூட்டணி உருவாகும் பட்சத்தில் , அது நிச்சயமாக பொது செயல்திட்டம், வரையறுக்கப்பட்ட பேச்சு வார்த்தை ஆகியவற்றின் அடிப்படையில் தான் அமையும்.

இது வரை பாஜக.,வுடன் அதிகாரப் பூர்வமாக பேச்சு வார்த்தை நடைபெற வில்லை. அதற்கான கால வரையறையை நாங்கள் விதிக்கமுடியாது. பேச்சு வார்த்தை என்பது தாமாக நடைபெற வேண்டும்.

கூட்டணி அமையும் பட்சத்தில், சுழற்சி முறையில் முதல்வர் பதவியை வகிப்பது குறித்து பேச்சு வார்த்தையின் போதுதான் முடிவுசெய்ய இயலும் என்றார் அவர்.

இந்நிலையில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முஃப்தி முகமது சயீத், கூட்டணி குறித்து பாஜக தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply