மக்கள்நலனில் அக்கறை யில்லாத சுயநல வாதிகள் மட்டுமே பாஜக.,வுடன் கூட்டணிசேர யோசிப்பார்கள் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது ,

தமிழகத்தில் ஐந்தரை கோடி வாக்காளர்களில், ஒருகோடி வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க உள்ளோம். வரும் 2016ல் பாஜக தமிழகத்தில் மிகப் பெரிய சக்தியாக விளங்கும். தமிழகத்தில் ஒரு மாற்றுசக்தி வரவேண்டும் என்றும், மாற்றம் வர வேண்டும் என்றும் மக்கள் தெளிவாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தமாற்றத்தை பாஜக தலைமையிலான கூட்டணி தான் கொடுக்க முடியும்.

மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் மட்டுமே, பாஜக கூட்டணியில் சேருவார்கள். சுய நலம் உள்ளவர்கள் பாஜக கூட்டணியில் சேரயோசிப்பார்கள். மத்திய அரசு பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் உள்நோக்கோடு குற்றச்சாட்டுகளை கூறிவருவதை ஏற்கமுடியாது என்றார்.

Leave a Reply