மும்பையில் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டில் புராணங்களையும் இதிகாசங்களையும் சுட்டிக் காட்டி விஞ்ஞானிகள் என்ற பெயரில் சிலர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளது சர்வதேச விஞ்ஞானிகள் பலரையும் வியப்படையச் செய்துள்ளதோடு, இப்படிப்பட்ட அறிவியல் மாநாடு தேவையா என விமர்சிக்கவும் வைத்துள்ளது!! இதில் 7000 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் விமானங்கள் இருந்ததாக கட்டுக்கதை அரங்கேறிய அபத்தமும் நடந்தேறியது !! — தினமலர் செய்தி !!

இந்த மாநாட்டில் பைலட் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஒய்வு பெற்ற திரு. ஆனந்த் போடாஸ் என்பவர் சம்ஸ்கிருத மொழி குறித்து சமர்ப்பித்துள்ள கட்டுரையே இத்தகைய விமர்சனத்தைப் பெற்றுள்ளது!!

என்னுடைய TREASURES OF HINDUISM தொடரில் வெளியான மகரிஷி பரத்வாஜரின் 'வைமானிக சாஸ்த்ரா' பற்றிய செய்திகளை அடியொற்றியே திரு. ஆனந்த் கட்டுரையும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாம் கட்டுக்கதை என்ற விமர்சனத்தைப் பல இந்திய விஞ்ஞானிகளும் கூறியுள்ளது நகைச்சுவையானது!! ஏனென்றால் வெள்ளையர் ஆட்சியின் போது இந்தியாவின் கல்விச் செல்வங்கள் அனைத்தும் வெள்ளையர்களாலும் ஜெர்மானியர்களாலும் கடத்திச் செல்லப்பட்டு புதுக் கண்டுபிடிப்புக்கள் போலக் காட்டப்பட்டுள்ளதை நான் பல பதிவுகளில் சுட்டிக் காட்டியுள்ளேன்!!

இதோ இதே மாநாட்டில் அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அவர்கள் சொன்னது போல இந்தியரால் கண்டறியப்பட்ட பிதாகரஸ் தேற்றம் இன்று கிரேக்க நாட்டால் உரிமை கொண்டாடப்படுகிறது. அதே போல நம் நாட்டு பண்டைக்கால வேத கணித ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட அல்ஜீப்ரா கணித முறைக்கு இன்று அரபு நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன!!

அடிமைப்பட்டுக் கிடந்த பண்டைய பாரதத்தில் காப்புரிமை போன்ற வெளிநாட்டு வெங்காயங்களைப் பெற முடியாததால் இன்று இந்த நிலை வந்துள்ளது!!

மகரிஷி பரத்வாஜரால் கண்டறியப்பட்ட மெர்குரி வெர்டக்ஸ் இஞ்சின் குறித்த ரகசிய ஆய்வுகள் சீன நாட்டிலும், ஜெர்மனியின் ஹிட்லர் ஆட்சியிலும் மேற்கொள்ளப்பட்டன!! சீன நாட்டில் உள்ள ஒரு குகையில் ஒரு கலனில் பாதரசத்துடன் உள்ள ஒரு இயந்திரம் கண்டறியப்பட்டது. ஹிட்லர் இந்த அடிப்படையில் பறக்கும் தட்டுக்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்!!

இந்த வைமானிக சாஸ்த்ரா நூலடிப்படையில் ரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடித்ததற்கு எட்டாண்டுகள் முன்பே இந்தியரான 'ஷிவ்கர் பாபுஜி தல்பாடே' மெர்குரி வெர்டக்ஸ் இஞ்சின்' ஒன்றை வடிவமைத்து அதை மும்பைக் கடற்கரையில் பறக்க விட்ட சரித்திர நிகழ்வு ஆதிக்க வெள்ளையர்களால் மறைக்கப்பட்ட சம்பவம் இதோ இந்திய சரித்திரத்தில் இது வரை பதிவாகாமலே உள்ளது.

டாக்டர். ராம்ப்ரசாத் காந்திராமன் என்னும் இந்திய நாசா விஞ்ஞானி இந்த மாநாட்டில் இது போல போலித்தனமான விஷயங்கள் ஆய்வுக் கட்டுரையாகப் படிக்கப்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தல்படே விமானம் கண்டுபிடித்து 119 ஆண்டுகள் ஆன பின்பும் அது போல ஒரு மெர்குரி வெர்டக்ஸ் இஞ்சின் கொண்ட விமானத்தை வடிவமைக்கத் துப்பில்லாமல் இருக்கும் நாசா விஞ்ஞானி தெரிவிக்கும் இந்தக் கண்டனங்கள் அறிவற்றது. அவர் வேண்டுமானால் வைமானிக சாஸ்திரா நூலைப் படித்துப் பார்த்து அதில் சொல்லப்பட்டுள்ள விமானம் ஒன்றைத் தயாரிக்க முயலட்டும் அறிவு இருந்தால் !!!!!!!!

நன்றி துரோனாசாரியார்

Leave a Reply