தாஜ்மஹாலால் புகழ்பெற்ற ஆக்ரா இனி தாய்மதம் திரும்பும் விழாவால் புகழ் பெரும். அங்கே 100 முஸ்லிம்கள் தாய்மதம் திரும்பி, ஹிந்துக்கள் ஆனார்கள். 'எவ்வளவு பெரிய அநியாயம் இது!' என்று நாடாளுமன்றத்தில் பெரிய பூகம்பமே வெடித்தது. காங்கிரஸ், கம்யூனிஷ்ட், மாயாவதி கட்சியினர் விவேகம் சிறிதும் இல்லாமல் எகிறி எகிறிக் குதித்தார்கள். ஊடகங்களும் ஏதோ நடக்கக்கூடாது நடந்துவிட்டது போல பெரிய பெரிய விவாதங்களை அரங்கேற்றினர்.

கூட்டம், கூட்டமாக ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக, முஸ்லிம்களாக மதம் மாற்றியபோது வராத கோபம் இப்போது மட்டும் இவர்களுக்கு வருவது ஏன்? இது தான் ஓட்டு அரசியல். மதமாற்றமே தங்களது வாடிக்கையான தொழிலாக எத்தனையோ கிறிஸ்தவ மிஷனரிகள் செயல்பட்டு வருகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) என்ற போர்வையில் ஏராளமான கிறிஸ்தவ, முஸ்லிம் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கோடி கோடியாய் பணம் வந்து கொண்டிருக்கிறது. இதை வைத்து ஏழை, எளிய, அப்பாவி ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக, முஸ்லிம்களாக மதம் மாற்றி வருகிறார்கள். முஸ்லிம்கள் 'லவ்ஜிகாத்' என்ற பெயரில் அப்பாவி ஹிந்துப் பெண்களுக்கு காதல் வலை வீசி மதம் மாற்றி வருகிறார்கள்.

நாட்டின் வடகிழக்கு பாரதத்திலுள்ள அஷ்ஷாம், மேகாலயா, நாகாலாந்து, மிசோராம், திரிபுரா போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவ மதமாற்றத்தின் காரணமாக ஹிந்துக்கள் மைனாரிட்டிகளாகி விட்டார்கள். காஷ்மீரில் மண்ணின் மைந்தர்களான காஷ்மீர் பண்டிட்டுகள் நான்கு லட்சம் பேரை முஸ்லிம் வெறியர்கள் அடித்து வெளியே துரத்தி விட்டார்கள். அவர்கள் சொத்து சுகமெல்லாம் இழந்து இன்று நாடோடிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

எந்த ஒரு ஊரிலும் ஹிந்து எண்ணிக்கை குறைந்தால் என்ன விபரீதம் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. எனவேதான் ஹிந்துக்கள் தங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள பிரிந்து போன சகோதரர்களை திரும்ப வீட்டுக்குள் அழைத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஏற்கனவே கன்யாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆதிக்கம். ராமநாதபுரம் மாவட்டத்திலோ கொஞ்சம், கொஞ்சமாக முஸ்லிம் ஆதிக்கம். சென்னையில் எல்லா குடிசைப் பகுதிகளிலும் திடீர் திடீரென்று புதிது புதிதாக சர்ச்சுகள் தோன்றி, சத்தமில்லாமல் மதம் மாற்றும் பணிகளைச் செவ்வனே செய்து வருகின்றன. இது பற்றியெல்லாம் எந்த கட்சியும் மூச்சு விடுவதில்லை.

ஆக்ராவில் ஹிந்துக்களாக தாய்மதம் திரும்பியோர் சில நூறு பேர்; வாள் முனையில் மதமாற்றப்பட்டவர்களின் சந்ததிகளோ (ஜாட்கள்) 30,000 பேர் 40,000 பேர் என்று ஹிந்துக்களாகி வருகிறார்கள். ஹிந்துவின் கை ஓங்குவதை எந்தக் கொம்பனாலும் தடுத்துவிட முடியாது.

நன்றி : விஜய பாரதம்

Leave a Reply